சேலை அணிந்து கபடி விளை­யாடும் பெண்கள்

Published By: Vishnu

11 Oct, 2022 | 01:34 PM
image

சேலை அணிந்த பெண்கள் கபடி விளை­யாடும் காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்தில் வெளி­யாகி வரு­கி­றது.

இந்­திய நிர்­வாக சேவை அதி­கா­ரி­யான அவனிஷ் சரண் டுவிட்­டரில் இந்த வீடி­யோவை வெளி­யிட்­டுள்ளார். இது­வரை 3 லட்­சத்­துக்கும் அதி­க­மான தட­வைகள் இந்த வீடி­யோவை பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது.

ஏனைய கபடி போட்­டி­யா­ளர்­களைப் போன்று பல பெண்கள் இப்­போட்­டியில் பங்­கு­பற்­று­கின்­றனர். ஆனால், அவர்கள் சேலை அணிந்த நிலையில் போட்­டி­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. அத்­துடன் தமது தலை­யையும் அவர்கள் முக்­காட்­டினால் மூடி­யுள்­ளனர்.

'நாம் யாருக்கும் குறைந்­த­வர்கள் அல்லர், சத்­திஸ்­க­ரியா ஒலிம்­பிக்கில் பெண்கள் கபடி' என்ற குறிப்­புடன் மேற்­படி வீடி­‍‍யோவை அவனிஷ் சரண் வெளி­யிட்­டுள்ளார்.

13,000 இற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை 'லைக்' செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்