(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ராஜபக்ஷ் அரசாங்கமே காரணமாகும். இவர்களின் நடவடிக்கையை அடிப்படையாகக்கொண்டே நாடுகள் எமக்கு எதிராக வாக்களித்துள்ளன. மாறாக ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைக்கு அல்ல என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொதவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கட்சியின் தபதெனிய தொகுதி அமைப்பாளர் பாரத தென்னகோன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிகவும் பொறுப்பு கூறவேண்டும் என ஒருசில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை, கோத்தாபய ராஜபக்ஷ் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ் அரசங்கத்தின் ஊழல் மாேசடிமிக்க ஆட்சிக்கு எதிரானதாகும். இவர்களின் மோசமான நடவடிக்கையை பார்த்தே எமக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருந்தன.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வதேச ரீதியில் சிறந்த மதிப்பு இருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த கடந்த கால அரசாங்கங்களின்போது ஜெனிவாவில் எமக்கு எதிராக இவ்வாறான பிரேரணைகள் கொண்டுவரப்படவில்லை.
அதேநேரம் கடந்த காலங்களில் எமக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நாடுகளும் இம்முறை வாக்களிப்பில் கலந்துகாெள்ளவில்லை. ராஜபக்ஷ்வினரின் மோசமான நடவடிக்கைகளும் தீர்மானங்களுமெ இதற்கு காரணமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கு பொறுப்பு கூறமுடியாது.
என்றாலும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளை அரவணைத்துக்கொண்டு செயற்படுகின்றார். கடந்த வாரம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்போது அவர் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் நேரடியாக கலந்துரையாடி இருந்தார். எமது நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு உதவுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருகின்றார். அரசியல் வேறுபாடுகளை மறந்து அவரின் பயணத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM