75 வருங்களாக கோவில் பிரசாதத்தை உண்டு வந்த முதலை உயிரிழப்பு

Published By: Digital Desk 3

10 Oct, 2022 | 05:21 PM
image

75  வருங்களாக கோவில் பிரசாதத்தை உண்டுவந்த முதலை உயிரிழந்துள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா பகுதியில் - அனந்தபுரத்தில் அருள்மிகு அனந்த பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. 

குளத்தின் நடுவே அமைந்துள்ள இந்தக் கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு மூலஸ் தானமாக விளங்குவது என்பது ஐதிகம். 

இந்தக் கோவிலின் குளத்தில் வாழ்ந்த தெய்விக முதலை நேற்று இரவு உயிரிழந்தது. தெய்விக முதலையாகவும் பபியா என்ற பெயரிலும் பக்தர்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

1945-ல் இந்தக் கோயில் வாசலுக்கு வந்த முதலை ஒன்றை பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றதாகவும் அதன் பிறகு இந்த முதலை திடீரென திருக்குளத்தில் தோன்றியதாகவும் செவிவழிச் செய்தி உண்டு.

கோயில் குளத்தில் வாழ்ந்து வந்த இந்த முதலை `பபியா' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முதலை இங்கு எப்படி வந்தது, அதற்கு பபியா எனப் பெயரிட்டது யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

அனந்தபத்மநாப சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்தத் தெய்விக முதலையை ஒருமுறையேனும் தரிசித்துவிட மாட்டோமா என்று காத்திருப்பார்களாம். ஆம், இதை தரிசிப்பது பெரும் பாக்கியம் என்பது இந்தப் பகுதி பக்தர்களின் நம்பிக்கை.

ஒருமுறை, இந்த முதலை கோயில் கருவறைக்கு முன் வந்து சாமி தரிசனம் செய்ததை அர்ச்சகர்  படம் பிடித்து வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த ஃபோட்டோ அதிகளவில் பகிரப்பட்டது.

கோயிலின் திருக்குளத்தில் மீன்கள் அதிகமாக உள்ளபோதும் இந்த முதலை அவற்றை உண்பது இல்லையாம். கோயிலில் நைவேத்தியம் செய்யப்பட்ட பச்சரிசி சாதத்தைக் காலையிலும், மதியமும் அர்ச்சகர் குளத்தில் போடுவார். அந்தப் பிரசாதத்தையே இந்த முதலை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்துள்ளது.

அதேபோல், இந்த முதலைக்கு உணவு வழங்குவதை ஒரு நேர்ச்சை வழிபாடாகவே பக்தர்கள் செய்து வந்துள்ளனர். பபியா முதலை யாருக்கும் தீங்கு விளைவிக்கவோ, ஒருபோதும் மூர்க்கமாக நடந்துகொண்டோதோ இல்லை என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

2019-ம் ஆண்டில் இந்த முதலை உயிரோடு இல்லை என்றொரு தகவல் பரவியது. அப்போது `முதலை நல்லபடியாக உள்ளது' என கோயில் நிர்வாகிகள் அறிவித்த நிகழ்வும் நடைபெற்றது. அதன்பிறகும் இந்த முதலை கோயில் வளாகத்துக்கு வந்து சென்றுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பபியா முதலை இறந்துவிட்டது. தெய்விக முதலையின் உடல் கோயில் வளாகத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. பபியா முதலை இறந்ததைத் தொடர்ந்து இன்று காலை கோயில் நடை திறக்கப்படவில்லை. 

முதலையின் இறுதிச்சடங்குகள் முடிந்தபிறகு கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது. பக்தர்கள் திரளாகக் கோயிலுக்குச் சென்று பபியா முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நன்றி விகடன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48
news-image

புறா வளர்ப்பால் 2 நுரையீரலும் செயலிழந்த...

2023-09-22 10:47:19
news-image

இந்தியாவில் உள்ள கனடா தூதரக பணியாளர்களிற்கு...

2023-09-21 15:31:04
news-image

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா...

2023-09-21 13:16:58
news-image

ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக...

2023-09-21 12:27:04
news-image

 வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை  ...

2023-09-21 10:45:26