(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலவீனமடைந்து விட்டது,இனி அரசியலில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளும் என பலர் அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.இடைப்பட்ட காலத்தில் அரசியல் இலாபமும் தேடிக் கொண்டார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு கடந்த 8ஆம் திகதி'ஒன்றிணைந்து எழுவோம் -களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்'என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் இடம்பெற்றது.பொதுஜன பெரமுனவின் இந்த எழுச்சி பிரதான அரசியல் கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி கண்டி நகரில் இடம்பெறவுள்ளது.மூன்றாவது கூட்டம் புத்தளம் நகரில் இடம்பெறவுள்ளது.நாடளாவிய ரீதியில் இனி கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.
களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் நகைப்புரியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டதால் தான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.பொதுஜன பெரமுனவுக்கு புண்ணியம் கிடைக்கும் வகையில் அரசியலில் பிரவேசித்தவர்கள் தான் இன்று பொதுஜன பெரமுனவை விமர்சிக்கிறர்கள்.
நாட்டின் பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM