அரசுக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் கண்டனம்.!

Published By: Robert

22 Nov, 2016 | 04:33 PM
image

வட மாகாணத்தில் இயங்கிவரும் உப்பளங்கள் தனியார் மயப்படுத்தல் சம்பந்தமாக மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்தமைக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம் தெரிவித்ததுடன் இது சம்பந்தமாக எங்களுடனும் பேசியிருக்க வேண்டும் என தெரிவித்தார். 

இவை எக்காரணம் கொண்டும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதன்போது உறுதிமொழி வழங்கினார்.

இணைத் தலைவர்களான வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், எம்.எம்.மஸ்தான் ஆகியோர் தலைமையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மன்னாரில் நடைபெற்றது.

இவ் கூட்டத்தில் மாந்தை சோல்ட் உப்பளங்களை தனியார் மயப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீண்ட நேரம் இது விடயமாக இங்கு பேசப்பட்டது. 

இதன்போது இவ் கூட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில்,

உப்பளத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தாலும்கூட அவர்கள் எம்முடன் கூட்டுறவாக இருந்து செயல்படுவார்களா என்பதை பரிசீலிக்க வேண்டியது ஒன்றாகும். 

அத்துடன் கூட்டுத்தாபனம் தொடர்ந்து நல்லமுறையில் செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

அவசரப்பட்டு மாந்தை சோல்ட் லிமிட்டேட் உப்பளத்தை தனியார் மயப்படுத்தல் தொடர்பாக  எம்முடன் கலந்தாலோசிக்க வேண்டும். 

 இவ் உப்பளத்தை தனியார் மயப்படுத்தலை உடன் செய்ய வேண்டாம். இந்த விடயத்தை மத்திய அரசாங்கம் செய்வதனால் மாகாண சபை அமைச்சுடன் தான் பேசுவேன் என  இதற்கு பொறுப்பான அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.

மாகாணத்துக்குரிய அதன் பாதிப்பை நாங்கள் தான் அறிவோம். ஆகவே இவற்றை சொல்லுவதற்கு எமக்கு இடமளிக்க வேண்டும். மத்திய அரசாங்கம் இது சம்பந்தமான ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது எந்தவிதமான பாதிப்பு வரும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

அமைச்சர் றிசாட் மத்திய அரசுக்கும் இந்த மாகாணத்துக்கும் உரியவர். ஆகவே அவருக்கு இருபக்கமும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.  மக்களுக்கு எப்படியான பாதிப்புக்கள் உருவாகும் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் கேட்டுக் கொள்கின்றேன். இது சம்பந்தமாக விவாதங்கள் செய்யுங்கள்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38