கொழும்பில் குடியேற்றத்திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை

Published By: Vishnu

10 Oct, 2022 | 05:42 PM
image

(எம்.மனோசித்ரா)

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

திறைசேரிக்குச் சுமையை ஏற்படுத்தாமல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு மாற்று வழிகளைக் கடைப்பிடிக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் 5500 வீடுகளை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 4074 அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

மேலும் குறைந்த வருமானம் கொண்ட கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் சீனக் குடியரசின் மானியமாகப் பெறப்படும்  552 மில்லியன் யுவான் தொகையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்.

அந்தத் திட்டத்தின் கீழ் பேலியகொட, மொரட்டுவை, தெமட்டகொட, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பின் கீழ் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றங்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீடுகளை டொலர்கள் மூலம் விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் வீடுகளை விற்றுக் கிடைக்கும் பணத்தை வீடமைப்பு நிர்மாணத் திட்டங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக...

2025-01-26 13:16:39
news-image

மஹியங்கனை - கண்டி வீதியில் லொறி...

2025-01-26 12:12:23
news-image

கனடா பல்கலைக்கழக ஆய்வாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்...

2025-01-26 12:29:59
news-image

சிலாபத்தில் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

2025-01-26 12:53:46
news-image

யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுர

2025-01-26 12:32:28
news-image

வாரியபொல பகுதியில் நீரில் மூழ்கிய இரு...

2025-01-26 11:24:26
news-image

இலங்கை வர ஆய்வுக் கப்பல்களுக்கு தடையில்லை;...

2025-01-26 12:58:44
news-image

வாழைச்சேனையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர்...

2025-01-26 12:41:41
news-image

யோசித்த ராஜபக்ஷவை மகிந்தவின் மகன் என்பதற்காக...

2025-01-26 10:58:29
news-image

காலி இமதுவ பகுதியில் மூன்று பஸ்கள்...

2025-01-26 13:15:53
news-image

பெப்ரவரி 10 எமிரேட்ஸ் செல்கிறார் ஜனாதிபதி

2025-01-26 11:15:14
news-image

கூட்டமொன்றில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே...

2025-01-26 12:09:02