சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

10 Oct, 2022 | 11:54 AM
image

முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் கே.வி. அனுதீப் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் 'பிரின்ஸ்'. 

இதில் சிவகார்த்திகேயன் ஆசிரியர் வேடமேற்று  நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக உக்ரேனிய நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா தமிழ் கற்பிக்கும் ஆசிரியையாக வேடமேற்று நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ஆனந்தராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். 

சாதிக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த படத்தை சுனில் நரங், டி. சுரேஷ் பாபு, புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முன்னோட்டம் இப்போது வெளியாகியுள்ளது.  

முன்னோட்ட காட்சிகளில் சிவகார்த்திகேயன் பள்ளிக்கூட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராகவும், நாயகி மரியா அதே பாடசாலையில் தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியையாகவும் வருகிறார்கள். 

சாதி மோதல்கள் இருக்கும் அந்த ஊரில் சிவகார்த்திகேயனின் மேலைத்தேய நாட்டுப் பெண்ணின் மீதான காதல் என்ன ஆனது என்பதுதான் சுவாரஸ்யமான கதையாக இருக்கிறது. 

'டான்' படத்தில் கல்லூரி மாணவராக அட்டகாசம் செய்த சிவகார்த்திகேயன், 'பிரின்ஸ்' படத்தில் ஆசிரியராக நடித்திருப்பது, ரசிகர்களிடையே எத்தகைய வரவேற்பை பெறும் என்பது படம் வெளியான பிறகே தெரியவரும். 

இருப்பினும், 'பிரின்ஸ்' படத்தின் முன்னோட்டம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வசப்படுத்தி சாதனை படைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37