பசித்திருக்கும் பூதங்களுக்கு உணவு படைக்கும் விழா

Published By: Vishnu

10 Oct, 2022 | 11:23 AM
image

பசித்­தி­ருக்கும் பூதங்­க­ளுக்கு உண­வ­ளிக்கும் விழா கம்­போ­டி­யாவில் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.

இறந்த மூதா­தை­யர்­க­ளுக்­காக இவ்­விழா கொண்­டா­டப்­ப­டு­வ­துடன் பசித்­தி­ருக்கும் பூதங்­க­ளுக்கு உண­வ­ளிப்­பதும் இவ்­வி­ழாவின் நோக்கம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பச்சும் பென் விழா எனவும், மூதா­தை­யர்­க­ளுக்­கான கெமர் விழா எனவும் இவ்­விழா அழைக்­கப்­ப­டு­கி­றது. ஒவ்­வொரு வரு­டமும் செப்­டெம்பர், ஒக்­டோபர் மாதங்­க­ளுக்கு இடையில் 15 நாட்கள் இவ்­விழா நடத்­தப்­படும்.

இக்­கா­லங்­களில் நர­கத்தின் வாயில் திறக்­கப்­படும் எனவும் அதை­ய­டுத்து பெரும் எண்­ணிக்­கை­யான பூதங்கள் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தற்கு திறந்­து­வி­டப்­படும் எனவும் கம்­போ­டிய மக்கள் நம்­பு­கின்­றனர்.

இப்­பூ­தங்கள் பசி கார­ண­மாக புதை­கு­ழி­க­ளிலும், ஆல­யங்­க­ளிலும் உணவு தேடி திரியும் என நம்பும் மக்கள் இப்­பூ­தங்­க­ளுக்­காக பல்­வேறு வித­மான உண­வு­களை படைக்­கின்­றனர்.

உணவு படைத்த குடும்­பங்­க­ளுக்கு பசி­யாறும் பூதங்கள் ஆசி வழங்கும் எனவும், பசி­யுடன் இருக்­கும் பூதங்கள் நர­கத்­துக்கு திரும்பிச் சென்று உற­வு­க­ளுக்கு துன்­பங்­களைக் கொடுக்கும் எனவும் அம்­மக்கள் நம்­பு­கின்­றனர்.

இறந்த மூதா­தை­யர்கள், உற­வி­னர்­களில் யார் சொர்க்கம் சென்­றார்கள், யார் நர­கத்­துக்கு சென்றார்கள் என அறிந்துகொள்ள முடியாததால், பொதுவாக, இறந்த உறவுகளுக்கு நன்மையளிப்பதற்காக இவ்விழாவில் மக்கள் உணவு படையல்களை நடத்துகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்