தீயணைப்புப் படையினரின் வாகனமொன்றிலிருந்து, நீச்சலுடை மாத்திரம் அணிந்த பெண்ணொருவர் இறங்கிச் சென்ற சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தின் சான் ஜோஸ் நகரில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துகிலுரி நடன விடுதியொன்றுக்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்ட தீயணைப்புத்துறை வாகனத்திலிருந்து நீச்சலுடை மாத்திரம் அணிந்த பெண்ணொருவர் இறங்கி நடந்து செல்லும் காட்சி அடங்கிய வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
அப்பெண் நேராக மேற்படி துகிலுரி நடன விடுதியொன்றுக்கு நடந்து சென்றார்.
குறித்த பெண், அவ்வேளையில் மேற்படி விடுதியினால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தாரா என்பது தெரியவில்லை.
அருகிலுள்ள வர்த்தக நிலையத்திலிருந்த ஒருவர் இது குறிதது கூறுகையில், 'என்ன சொல்வதென்று தெரியவிலலை. அப்பெண் மேலாடை எதுவும் அணிந்திருக்கவில்லை. அப்பெண் தீயணைப்பு வாகனத்துக்குள் என்ன செய்துகொண்டிருந்தார், யார் அந்த வாகனத்தை இயக்கினார்கள், அதற்கு யார் பொறுப்பாக இருந்தாரக்ள், ஏன் இதை அவர்கள் அனுமதித்தார்கள் எனத் தெரியவில்லை' எனக் கூறியுள்ளார்.
மேற்படி வீடியோ இணையத்தில் வைரலாகியதையடுத்து, இச்சம்பவம் குறித்து தான் விசாரணை நடத்துவதாக சான் ஜோஸ் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இது ஒரு மோசமான நடவடிக்கை என விசாரணையில் கண்டறியப்பட்டால் சிலர் பணிநீக்கம் செய்யப்படுவர் என சான் ஜோஸ் நகர மேயர் சாம் லிக்கார்டோ தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM