புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்று சனிக்கிழமை (ஒக் 8) உயிரிழந்ததாக தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரான டேவிட் மில்லர் தனது இன்ஸ்டகிராமில் பதிவொன்றை இட்டிருந்தார்.
இந்தப் பதிவையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து மில்லர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் காணொளியொன்றை வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளார்.
“RIP my little rockstar... Love you always!” என மில்லர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய காணொளிக்கு தலைப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், “உன்னை ரொம்ப மிஸ் பண்கிறேன் ஸ்கட். மிகப்பெரிய மனம்படைத்தவள் நீ. எப்போதும் முகத்தில் புன்னகையுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கும் நீ வித்தயாசமானவள். குறும்புத்தனமான பக்கமும் உனக்கு உண்டு. உன்னுடைய பயணத்தில் ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்ட நீ, ஒவ்வொரு தருணத்தையும் எப்படி நேசிப்பது என்பதை எனக்கு கற்றுத்தந்தாய். உன்னுடன் பயணம் மேற்கொண்டதை நினைத்து மனம் நெகிழ்கிறேன். ஐ லவ் யூ” என உருக்கமான பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், டேவிட் மில்லரின் மகள் புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதாக கருதி அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர், மில்லரின் ரசிகர்கள். அத்துடன் சமூக ஊடகங்களிலும் பல்வேறு செய்தித் தளங்களிலும் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதாக செய்திகள் வைரலாக பரவின. ஆனால், உண்மையில் உயிரிழந்தது அவரது மகள் இல்லை. அந்த சிறுமி மில்லரின் தீவிரமான ரசிகை மட்டுமல்ல, நண்பரின் மகளும் ஆவார்.
மேலும், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ள 'அனே' என்ற அந்த 10 வயது சிறுமியையும் தன் மகள் போல் டேவிட் மில்லர் கவனித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM