பசிலின் தலையீடே 22 ஆவது திருத்தம் பிற்போடப்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணம் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Vishnu

09 Oct, 2022 | 01:32 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலையீட்டின் காரணமாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது.

எனவே இந்த பாராளுமன்றத்திடமிருந்து இனியும் எந்த நன்மையான விடயங்களையும் எதிர்பார்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

ருவன்வெல்ல தொகுதியில் 08 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று முழு நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. 22 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால் என்ன நடந்தது? திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட தினத்திற்கு முதல் நாள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி 22 ஐ அவர்களில் பெருமளவானோர் எதிர்ப்பதாகக் கூறினார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த 22 ஆவது திருதத்தினை பிற்போட்டனர். இன்று நாட்டிலும் இல்லாத பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவை நிர்வகிக்கின்றமையே இதற்கான காரணமாகும்.

கோப் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார பஷில் ராஜபக்ஷவின் பிரதிநிதியாவார். ஆனால் இந்த பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே நியமிக்கப்படுவார் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம்.

பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவினரை நிர்வாகிப்பது இன்றும் ராஜபக்ஷாக்களே என்பதற்கு இது சிறந்த சான்றாகும். எனவே இந்த பாராளுமன்றத்திடமிருந்து எமக்கு பெரிதாக எதனையும் எதிர்பார்க்க முடியாது. 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமானவர்கள் யார் என்பதைத் தேட வேண்டும்? அவர்களை இனங்கண்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் அதற்காக வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேவையற்றதாகவுள்ளன. அவர் வேறு அழகிய கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு அழகிய கதைகளைக் கூறுவதைப் போன்றே, எமது சொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்தையும் மறந்து முன்னோக்கி பயணிப்போம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். இவற்றை எவ்வாறு மறப்பது?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு!

2025-01-17 10:17:09
news-image

இரத்மலானையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-01-17 10:05:38
news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:58
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19