காங்கிரஸின் எதிர்காலம் ?

Published By: Digital Desk 5

09 Oct, 2022 | 01:29 PM
image

தமிழகம் முழுவதும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பேரணிக்கு அனுமதி அளிப்பதா? வேண்டாமா? என்ற விவாதமும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், ராகுல்காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணத்தில் இருக்கிறதா? அல்லது தலைவர் தேர்தல் இருக்கிறதா? என்கிற விவாதமும் தான் தற்போது அனல் பறக்க நடைபெற்று வருகிறது.

மின்கட்டண உயர்வு குறித்து தங்களுடைய வழக்கமான எதிர்ப்புகளை பதிவு செய்துவிட்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களுடைய அடுததக்கட்ட அரசியல் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டன. 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அது, தேசியத்தை மட்டுமே தன்னுடைய கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதனால் அந்த அமைப்பிற்கு தமிழகத்தில் பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  வருபவர்களும் உள்ளனர். 

ஆனால் அந்த அமைப்பினர் திரிபுரா மாநிலத்தில் பேரணியாக சென்றபோது, மாற்று மதத்தினரின் வணிக நிலையங்களை சூறையாடியும், தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். இது போன்ற நிகழ்வு தமிழகத்திலும் நடக்கக்கூடும் என்று ஜனநாயக சக்திகள் கரிசனை செலுத்தியுள்ளனர். 

இதனால், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு பேரணி நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. 

அதேதருணத்தில் தமிழகத்தில் இயங்கி வந்த ‘பொப்புலர் ப்ரண்ட் ஒப் இந்தியா’ என்ற இஸ்லாமிய அமைப்பிற்கு மத்திய அரசு ஐந்தாண்டு காலம் தடை விதித்திருக்கிறது. 

இதனால் அந்த அமைப்பின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள், விசுவாசிகள் எனப் பலரும் கடும் கொந்தளிப்பிலும், ஆத்திரத்திலும் இருக்கிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, திட்டமிட்டே உருவாக்கியிருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கான அனுமதியை மறைமுக நெருக்கடியின் பெயரில் பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. 

ஏனெனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணியில் வன்முறைகள் திட்டமிட்டோ அல்லது திட்டமிடப்படாமலோ நடைபெற்றால், அதற்கு தடை செய்யப்பட்ட பொப்புலர் ப்ரண்ட் ஒஃப் இந்தியா அமைப்பினர் தான் காரணம் என்று அவர்கள் மீது பழி சுமத்தி, தங்களின் எண்ணத்தை தமிழகத்தில் நிறைவேற்றிவிடலாமென திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

இதன் காரணமாகத்தான் ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பிற்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாட, உயர்நீதிமன்றமும் நவம்பர் 6ஆம் திகதியன்று பேரணியை நடத்தலாம் என்றும், அனுமதி குறித்து தமிழக காவல்துறை ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்தும் பேரணி அமைதியான முறையிலும் மக்கள் நலன் சார்ந்த முறையில் நடத்துகிறோம் என்பதில் அவர்கள் உறுதிபட இருந்தால், பேரணி செல்லும் பாதையை தெளிவாக காவல் துறையிடம் தெரிவித்துவிட்டு, பேரணிக்கு அனுமதி பெறவேண்டியதுதானே என்ற ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகளின் கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஏற்பதாக இல்லை. 

பேரணி நடைபெற்றால் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தான் அந்த அமைப்பினர் திட்டமிடுகிறார்கள். அது அரசியல் ரீதியாக சாதகமான பலனை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். அதற்கு தமிழக ஆட்சியாளர்களும், திராவிட சிந்தனையிலும், திராவிட சித்தாந்தத்திலும் நம்பிக்கைக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் மறுப்பு தெரிவிப்பதுடன், வெளிப்படைத்தன்மையுடன் பேரணி நடைபெறவேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார்கள். 

இதனால் நவம்பர் 6 ஆம் திகதியன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று, முழுக்க கண்காணிப்பு கமராவின் உதவியுடன் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகனே அதிகம் என்று ஆளுங்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பேரணி குறித்த எச்சரிக்கை அரசியலில் திராவிட கட்சிகளும் ஈடுபட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான ஸ்டாலின், அண்மையில் கட்சியினருக்கும், அமைச்சர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதனிடயே தமிழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்திய ஒற்றுமைப் பயணம் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினராலும் குறைத்து மதிப்பிடப்பட்டது. 

ஆனால் தேசிய கட்சிகளின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கு வரவேற்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்று கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மைசூரில் கொட்டும் மழையிலும் ராகுல் காந்தியின் பேச்சும், அவரது நடை பயணமும் அசலாகவே பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருந்தது. 

அதேதருணத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்க்கே மற்றும் சசி தரூர் இடையே போட்டி இருக்குமா? தேர்தல் நடைபெறுமா? என்பது இன்றையதினத்தில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். சசி தரூருக்கு தென்னகத்தில் ஓரளவு ஆதரவு கிடைக்கும் என்றும் ஆனால் சோனியா காந்தியின் ஆதரவு பெற்ற மல்லிகார்ஜுன் கார்கே தலைவராக வெற்றி பெறுவதற்கான சாத்தியம் அதிகம் என்று கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

 கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ராகுல் காந்தியின் முன்னெடுக்கும் ‘இந்திய ஒற்றுமைப் பயணத்தின’; பலனை காங்கிரஸ் கட்சி அறுவடை செய்யுமா? அல்லது அதன் புதிய தலைவருக்கு நேர்மறையான பலனை அளிக்குமா? என்பது கேள்விகளாகவே உள்ளது. 

இருப்பினும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல், விரைவில் நடைபெறவிருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராகுல் காந்தியின் பயணம் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளிப்பதற்கு வய்ப்புக்கள் உள்ளன. 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அக்கட்சிக்கு தேசிய அளவில் பா.ஜ.க. என்பதுதான் பொதுவான, சித்தாந்த ரீதியிலான எதிர்க் கட்சியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் அரசியல் ரீதியாக வலிமை பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சியும் சவாலாக திகழ்கிறது. 

இந்தக் கட்சிக்கான வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளாகவே இருப்பது தான் அளவிட முடியாத சோகம். இருப்பினும் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக தெரிவாகும் தலைவரும் கட்சியை வலிமைப்படுத்தி, வலுவுள்ள எதிர்கட்சியாகவும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் கட்சியாகவும் திகழும் 

காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்ந்தெடுத்தாலும், எடுக்காவிட்டாலும்.. அக்கட்சியின் தலைவர் ‘இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டாலும், மேற்கொள்ளாவிட்டாலும்... தமிழகத்தில் உள்ள மக்கள், தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்நே மக்கள் கருகின்றார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது - தனியார் கூட்டாண்மை முயற்சி...

2025-11-07 09:41:20
news-image

இலங்கையில் வயதானோர் அதிகரிப்பு : ஒரு...

2025-11-06 15:51:28
news-image

1990 அக்டோபர் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம்...

2025-11-06 13:00:52
news-image

உங்கள் இரகசிய தகவல் அல்லது அந்தரங்க...

2025-11-06 12:40:20
news-image

வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு...

2025-11-04 14:16:37
news-image

காலநிலை மாற்றம் எதிர்கொள்ளும் புதிய சவால்...

2025-11-04 09:29:59
news-image

வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு பிறகு...

2025-11-03 11:45:50
news-image

மலையகத்தின் மாற்றம் கல்வியில் தங்கியுள்ளது :...

2025-11-02 16:48:23
news-image

ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுக்கு எதி­ரான புதிய சட்டம்...

2025-11-02 16:45:01
news-image

மாறிவரும் உலகளாவிய ஒழுங்கிற்கான இலங்கையின் பொருளாதார...

2025-11-02 16:44:38
news-image

‘மாபெரும் மக்கள் குரல்’ ; யாருக்கு...

2025-11-02 16:18:31
news-image

வட மாகாண முஸ்லிம்கள் இலவு காத்த...

2025-11-02 14:55:31