மினுவாங்கொடையில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்கள் இன்று (08) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வியாழக்கிழமை (06) காலை 7.00 மணியளவில் மினுவாங்கொடை காமன்கெதர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் - தந்தை (51) மற்றும் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மூன்று கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்து ரி-56 துப்பாக்கியை பயன்படுத்தி மூவரையும் சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரணமடைந்த நபர்கள் சில மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பல ஆண்டுகளுக்கு முன் காத்தாடி தொடர்பாக நடந்த தகராறில், மூன்று கொலைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மொத்தம் 07 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில், ஆகஸ்ட் 2017 இல் காத்தாடி தொடர்பான சம்பவத்தின் காரணமாக ஒரு தந்தையும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.
மேற்கூறிய கொலையுடன் தொடர்புடைய மற்றொரு தந்தை-மகன் இருவரையும் பொலிஸார் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பின்னர் ஆகஸ்ட் 2018 இல் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், இந்தக் கொலையில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் ஜூலை 2021 இல் கொல்லப்பட்டார்.
ஒக்டோபர் 06 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் ஏற்கனவே, இந்த மரணதண்டனைக்கு குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM