இந்து சமுத்திரத்தில் இலங்கையுடன் கூட்டாண்மையுடன் செயற்படுகின்றோம் - 'தகவல் இணைவு மையம் - இந்து சமுத்திர பிராந்தியம்' தெரிவிப்பு

Published By: Digital Desk 3

08 Oct, 2022 | 06:56 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்து சமுத்திரத்தில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பில் இலங்கையுடன் கூட்டாண்மையுடன் செயற்பட்டு வருகின்றோம்.

பிராந்தியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்கச் செய்துள்ள இவ்வாறான செயற்பாடுகளை கண்காணிக்கும் கண்காணிப்பு மையமாக 'தகவல் இணைவு மையம் - இந்து சமுத்திர பிராந்தியம்' செயற்படுவதாக அதன் செயற்பாட்டு அதிகாரி அஷோக் ஷர்மா தெரிவித்தார்.

டில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவுக்கு ' தகவல் இணைவு மையம் - இந்து சமுத்திர பிராந்தியம்' மையத்தின் பணிகளை தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பில் 'தகவல் இணைவு மையம் - இந்து சமுத்திர பிராந்தியம்' இலங்கையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. 

தற்போது இந்து சமுத்திரத்தில் இந்த செயற்பாடுகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆயுதக் கடத்தல் பிராந்தியத்தில் அச்சுறுத்தலை அதிகரிக்கச் செய்துள்ளன.

எனவே இவ்வாறான அநாவசிய அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதற்கான கண்காணிப்பு மையமாக 'தகவல் இணைவு மையம் - இந்து சமுத்திர பிராந்தியம்' செயற்படுகிறது. இந்த கண்காணிப்பு செயற்பாடுகளுக்கு இலங்கையின் ஒத்துழைப்புக்களும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. 

அத்தோடு சரக்கு கப்பல் போக்குவரத்தின் போது ஏற்படக் கூடிய இயற்கை மற்றும் செயற்கை அச்சுறுத்தல்களை கண்காணிப்பதற்கும் , அவற்றை தவிர்ப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

உதாரணமாக இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயணைப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம். கடல் சார் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்காக நவீன தொழிநுட்ப செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் பங்குதாரர்களாக செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் களத்தில் ஏராளமான சவால்கள் உள்ளன. அதாவது கடற்கொள்ளை மற்றும் ஆயுதம், மனித மற்றும் கடத்தல் கடத்தல், சட்டவிரோதமான கட்டுப்பாடற்ற மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு கடல்சார் பாதுகாப்பு செயற்பாடுகளில் ' தகவல் இணைவு மையம் - இந்து சமுத்திர பிராந்தியம்' ஈடுபட்டு வருகிறது.

ஏனைய கடல்சார் நாடுகளைப் போலவே இந்தியாவும் அதன் சொந்த தேசிய கடல்சார் பாதுகாப்பு பொறிமுறையைக் கொண்டிருந்தாலும், கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள பிராந்திய ஒத்துழைப்பின் தேவை உணரப்பட்டது. அதற்கமையவே 'தகவல் இணைவு மையம் - இந்து சமுத்திர பிராந்தியம்' நிறுவப்பட்டது. 

இந்தியக் கடற்படையால் நிர்வகிக்கப்படும் வகையில் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு 22 டிசம்பர் 18 அன்று டில்லியின் - குருகிராமில் குறித்த மையம் நிறுவப்பட்டது.

பிராந்தியத்திற்கான கடல்சார் பாதுகாப்பு தகவல் பகிர்வு மையமாக செயல்படுவதன் மூலம், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மையத்தில் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், மாலைத்தீவு, மொரிஷியஸ், மியான்மர், இலங்கை, சீஷெல்ஸ், சிங்கப்பூர், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய 11 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரவின் கொழும்பில்...

2024-10-14 00:14:51
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11