நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை - நாமல் ராஜபக்ஷ

Published By: Digital Desk 5

08 Oct, 2022 | 06:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு அரசியல் ரீதியில் மீண்டும் பலம் பெறுவோம் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

'ஒன்றிணைந்து எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும்,2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றது.பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களுக்கு முழுமையான ஆணையை வழங்கினார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு  ஒரு காரணியாக உள்ளது.விவசாயத்துறையில் சேதன பசளை திட்டத்தை ஒரே கட்டமாக அறிமுகப்படுத்தியமை பொருத்தமற்றதாகும்.

விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதாரத்துக்கும் தாக்கம் செலுத்தியது.எமக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்களின் எதிர்பார்ப்பை எம்மால் நிறைவேற்ற முடியாமல் போனது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதார நெருக்கடி கட்ந்த மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

போரட்டம் மீது எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை,மாறாக போரட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் தான் பிரச்சினை உள்ளது.போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் போராட்டத்தில் முன்னிலை வகித்தவர்கள் தான் தற்போது அரச நிறுவனங்களின் பிரதானியாகவும்,அரசாங்கத்தின் முக்கிய பதவிகளிலும்,ஜனாதிபதியின் பணிக்குழு பதவிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு நாம் தான் காரணம் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.30வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து,நாட்டை அபிவிருத்தி செய்ததா நாங்கள் செய்த தவறு,உண்மையினை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எமக்கு எதிராக தற்போது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.தேசிய நீதிமன்றங்களிலும்,சர்வதேச நீதிமன்றங்களிலும் எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் அதனையும் வெற்றிக்கொள்வோம்.சகல சவால்களுக்கு முகம் கொடுத்து அரசியல் ரீதியில் முன்னேற்றமடைவோம்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13
news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை -...

2025-03-21 23:48:50
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59