பரத்தின் 'மிரள்' பட டீஸர் வெளியீடு

Published By: Nanthini

08 Oct, 2022 | 10:31 AM
image

டிகர் பரத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிரள்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் எம். சக்திவேல் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் 'மிரள்'. இதில் கதாநாயகன் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கே. எஸ். ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு எஸ்.என். பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

ஹொரர், த்ரில்லர் ஜேனரில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை அக்ஸஸ் ஃபிலிம் ஃபெக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் ஜி. டில்லிபாபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

டீஸரில் மிரளச் செய்யும் பல காட்சிகளை கொண்டுள்ள 'மிரள்' படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right