(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
சுற்றுலாத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபைக்கு தெரிவித்த பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் வழிமொழிந்தர்.
பாராளுமன்றத்தில் நேற்று (08) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்கவுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் தவ்போது பதவி விலகியுள்ளார். பெண் என்ற காரணத்தினால் அவருக்கு இந்த பதவியில் இருக்க முடியாதா? யார் இதற்கு விருப்பம் இல்லை. பெண்களுக்கு இந்த பதவியில் இருக்க முடியாதா? அதனால் பதவி விலகுமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிக்கையில்,
நீங்கள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர். விசாரணை நடத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது தானே. அதனால் நீங்கள் அதனை செய்யுங்கள் என்றார்.
இதன்போது எழுந்த தயாசிறி ஜயசேகர, இராஜாங்க அமைச்சர் என்றவகையில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்ன? அத்துடன் அமைச்சு விடய பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றதா என கேட்டார்.
இதற்கு இராஜாங்க அமைச்சர் டயனா பதிலளிக்கையில், அமைச்சு விடயதான பொறுப்புக்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எந்த அதிகாரமும் எனக்கு இல்லை. என்றாலும் நான் ஆளும் தரப்பில் இருந்து வெளியில் செல்லமாட்டேன். என்றாலும் என்னை அறிவுறுத்தாமல் பணிப்பாளர் நாயகம் பதவி விலகி இருக்கின்றார். அதனால்தான் அதுதொடர்பில் விசாரணை நடத்துமாறு கோருகின்றேன். அல்லது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் விசாரணை நடத்தவேண்டும் என பிரேரிக்கின்றேன் என்றார்.
இதன்போது சபையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி எழுந்து, விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற உங்களது பிரேரணையை எதிர்க்கட்சி என்ற வகையில் நான் வழிமொழிகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM