சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது - ஜி.எல். பீரிஸ்

Published By: Nanthini

07 Oct, 2022 | 10:04 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

யங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய பாதுகாப்பு சார் சட்டத்தை இயற்றும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்கால செயற்பாடுகளுக்கு எவ்வாறு சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றி கொள்ள முடியும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஒக் 7) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இம்முறை பெரும்பாலான ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா ஆகியவை கூட இலங்கைக்கு ஆதரவு வழங்கவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, பொருத்தமான பாதுகாப்பு சார் சட்டத்தை இயற்றும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கினேன்.

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் வெளிப்படையாகவே மீறியுள்ள நிலையில் எதிர்கால செயற்பாடுகளுக்கு எவ்வாறு சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிகொள்ள முடியும்.

உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய இயந்திர ரீதியான திட்டங்கள் செயற்படுத்தப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி எவ்வாறு, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சர்வதேசத்துக்கு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடுகளே இன்றும் காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று...

2023-12-10 13:00:20
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10