குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்படும் விகாரை நிர்மாணத்திற்கு தடையேற்படுத்துதல் முற்றிலும் தவறு - விமல் வீரவன்ச

Published By: Vishnu

07 Oct, 2022 | 05:15 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்படும் விகாரை நிர்மாணப் பணிகளுக்கு தடையேற்படுத்துதல் முற்றிலும் தவறானது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுகிறார்கள்.

நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்கள் குறித்து எவரும் பிரச்சினைகளை உருவாக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (7) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து 50 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் பெயர் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நாடுகளினால் இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது. இது தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.

குருந்தூர் மலை வரலாற்ற சிறப்பு மிக்க பௌத்த விகாரையாகும். இந்த விகாரையின் புனரமைப்புக்கு தடையேற்படுத்தவது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும்.

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த விகாரைகள் காணப்பட்டால் அதற்கு எதிராக பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள்.கூட்டமைப்பினரே அவ்வாறு செயற்படுகிறார்கள்.

ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறும் போது தான் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் சமய பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் தொடர்பில் எவரும் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01