இலங்கை அணி வீரர் சுரங்க லக்மாலுக்கு  ஐ.சி.சி. விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இலங்கை சிம்பாப்வே அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் போது,  சிம்பாப்வே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிப்ஹபாஹா துடுப்பாட்ட முனையில் ஒட்டத்தினை எடுக்கமால் நின்ற போது அவரை நோக்கி பந்தை வீசிய குற்றச்சாட்டுக்காக குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பந்து சிப்ஹபாஹாவை தாக்காத போதும்  லக்மாலின் செயற்பாடு ஐ.சி.சி. விதிமுறைகளை மீறியதாக இருந்ததால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.