(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அதனை விடுத்து மாற்று வழிகளை முன்வைக்க வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறு செயல்படாமையே நாடு நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு காரணமாகும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் சற்று பின்னோக்கி இருக்கின்றபோதும் நாடு பெற்றுக் கொண்டுள்ள வெற்றிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
குறிப்பாக சுகாதாரத் துறையில் போலியோ, மலேரியா, எச்ஐவி, ரூபெல்லா போன்ற நோய்கள் நாட்டில் இருந்தே இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தாய் -சேய் மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டிய காலம் இது. அதற்கான தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிறந்த திட்டங்கள் இருந்தால் அதனை அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும். விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அதனை விடுத்து மாற்று வழிகளை முன் வைக்க வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறு செயல்படாமையே நாடு நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு காரணமாகியது .
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோரிடம் தமது நிதியை நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என சிலர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் பின் தங்கும் போது அதை வைத்து அரசியல் செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
கடந்த கால அனைத்து தவறுகளுக்கும் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டியது அவசியம். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பொது வேலை திட்டத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவது முக்கியம். நாடு இயல்பு நிலையை அடைந்ததும் ஒவ்வொருவரும் தமக்கான அரசியலை மேற்கொள்ள முடியும்.
அதனால் கடந்த கால சம்பவங்களை ஒருபுறம் வைத்துவிட்டு நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண செயற்படுவதே அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM