அவதானம் ! அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள் !

Published By: Priyatharshan

07 Oct, 2022 | 12:26 PM
image

நாடு பொருளாதார நெருக்கடியால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் கொலை, கொள்ளை, வழிப்பறிகள் போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அன்றாட செய்திகள் வாயிலாக காணக்கூடியதாகவுள்ளது.

பெரும்பாலும் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் மிகவும் பொறுப்புடன் வாழ வேண்டிய கட்டாயத்திற்குள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளான்.

கொரோனா பெருந்தொற்றையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டில் பலர் வேலைகளை இழந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவிப்பதுடன் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். அதிலும் பலர் போதைக்கு அடிமையாகி சமூகத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து தற்போது நாட்டில் கொள்ளைகளும் கொலைகளும் மலிந்து காணப்படுகின்றன. நண்பரொருவர் அவசர தேவைக்காக தனது காரில் புறக்கோட்டைக்கு சென்று அங்கு காரை நிறுத்திவிட்டு தனது தேவைகளை நிறைவு செய்துவிட்டு காருக்குள் ஏறி காரின் கண்ணாடியை சரிபார்த்துள்ளார். அப்போது காரில் இருந்த கண்ணாடி களவாடப்பட்டுள்ளதை அவதானித்த அவரும் நிலைகுலைந்து போயுள்ளார்.

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் பஸ்களில் பயணிகளிடமிருந்து அவர்களின் கையடக்கத்தொலைபேசிகளை மிகவும் சூட்சுமமாக திருடிச்செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன்னை பாதுகாப்பதா அல்லது தன்னுடன் உள்ள பொருட்களை பாதுகாப்பதா என்ற நிலை தோன்றியுள்ளது. டொலர் நெருக்கடியை அடுத்து ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளால் அனைத்துப் பொருட்களுக்கும் குறிப்பாக வாகன உதிரிப்பாகங்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களுக்கு தட்டுபாடுகளும் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் இவ்வாறான கொள்ளைகள் நாட்டில் அதிகரித்துச் செல்கின்றன. 

மொறட்டுவை பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மன்னாரில் இருந்து மொறட்டுவை நோக்கி ரயில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினரை கொள்ளையர்கள் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி, இரண்டு இலட்சம் ரூபா பணம் அடங்கிய பணப் பையை கொள்ளையிட்ட சம்பவம் அங்குலான பகுதியில் அண்மையில் பதிவாகியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதால் இதனை கட்டுப்படுத்த பொலிஸாரும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மனிதனும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. உங்களையும் உங்களது பொருட்களையும் மிகவும் அவதானத்துடனும் நிதானத்துடனும் பாதுகாக்க முன்வாருங்கள்.

அண்மையில் கம்பஹா - தங்கோவிட்ட பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கொள்ளைக் கோஷ்டியொன்றினை இலக்கு வைத்து பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டின் போது, இலக்குத் தவறிய துப்பாக்கிக்குண்டு வீதியால் சென்ற இ.போ.ச. பயணிகள் பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த 29 வயதான பெண் ஒருவர் மீது பாய்ந்து அவர் உயிரிழந்த துயரமான சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது.

பொருட்களின் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றன. ஆனால் வருமானமோ குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதில் பலரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துச் செல்ல வாய்ப்புகள் காணப்படும் அதேவேளை, அவற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இதேவேளை, அண்மையில் தம்புத்தேகமவில் 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்ற சந்தேகநபர்களை, தனது உயிரை பணயம் வைத்து கைதுசெய்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வும் பாராட்டுக்களும் கிடைத்தன. ஆனால் இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை வழங்கிய குற்றச்சாட்டில் ராஜாங்கணை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகளே இவ்வாறு செயற்படும் போது எதிர்காலத்தில் நிலைமைகள் இன்னும் மோசமடையலாம்.

இவ்வாறான நிலையில் நாட்டில் பசி, பஞ்சம் , பட்டினி அதிகரித்துச் செல்வதால் கொள்ளை, கொலை, வழிப்பறிகள் போன்ற வன்முறைச் சம்பவங்களும் போதைப்பொருள் பாவனைகளும் சமூகத்தில் அதிகரித்துச் செல்ல வாய்ப்புக்கள் அதிகம். எனவே ஒவ்வொருவரும் தம்மையும் தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தமது பொருட்களையும் பாதுகாக்க பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வீ.பி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைப்பழத்திற்கே இந்த விலையென்றால் ! மக்கள்...

2023-03-10 10:48:55
news-image

அவதானம் ! அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்...

2022-10-07 12:26:10
news-image

சிறுவர்களுக்கு வடக்கில் ஏன் இந்த அவலம்...

2022-09-30 14:49:03
news-image

மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!!

2022-10-07 13:56:09
news-image

உலகிற்கு முன்னெச்சரிக்கையாகும் இலங்கை சிறுவர்களின் நிலை

2022-08-27 21:39:00
news-image

இளமையிலேயே கருகும் மொட்டுக்கள் ! யார்...

2022-08-25 13:42:28
news-image

மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள் !

2022-08-05 14:11:17
news-image

ஜனாதிபதி ரணிலால் உருட்டப்பட்டுள்ள “சர்வகட்சி” என்ற...

2022-08-04 10:05:52
news-image

அரசியல்வாதிகளுக்கு மக்களின் குரல்கள் இன்னும் கேட்கவில்லையா...

2022-05-30 13:12:58
news-image

ஆசியாவின் ஆச்சரியமாக மாறுகிறதா இலங்கை ?

2022-05-28 11:49:44
news-image

அளவுக்கு மிஞ்சி பதுக்காதீர்கள் ! உயிரிழப்புக்களுக்கு...

2022-05-28 12:03:36
news-image

இது ஆரம்பமா ? இல்லை முடிவா...

2022-05-27 11:22:54