கத்தி முனையில் ஆசிரியரிடம் வழிப்பறி : மூவர் கைது

Published By: Digital Desk 5

07 Oct, 2022 | 12:59 PM
image

யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீதியில், ஆசிரியர் ஒருவரை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி  நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் வீடு திரும்பிய போதே வழிப்பறி கொள்ளை கத்திமுனையில் இடம்பெற்றது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு முன்னெடுத்த நடவடிக்கையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஊரெழு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23, 25 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய சந்தேக நபர்கள் மூவரும் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் , சந்தேக நபர்களிடமிருந்து நான்கரை தங்கப்பவுண் சங்கிலி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56