சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில் இறக்குமதி செய்யப்படவில்லை ; சுகாதார அமைச்சு

By T. Saranya

07 Oct, 2022 | 12:10 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆபிரிக்காவின் கெம்பியா பகுதியில் சிறுவர்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்திய நிறுவனத்தின் மருந்து இலங்கையில் இறக்குமதி செய்யப்படுவதில்லை என்று சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த மருந்து வகையினை எதிர்வரும் காலங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டுக்குள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முறையான ஒழுங்குபடுத்தும் முகவர் நிலையங்கள் உள்ளன. அதற்கமைய, குறித்த சர்ச்சைக்குரிய மருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மருந்துகளை பதிவு செய்யும் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்யும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருந்துகளை விநியோகிக்கும் மருந்து வழங்கல் பிரிவு என்பன இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

 இதற்கு மேலதிகமாக எமக்கு கிடைக்கப்பெற்ற நன்கொடைகளை ஆராய்ந்த பின்னர் கடந்த காலங்களில் பெறப்பட்ட மருந்துகளில் , மேற்குறிப்பிட்ட மருந்துகள் உள்ளடங்கவில்லை என்பதும்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய அறிவித்தல்களை விடுத்துள்ளது. எனவே இலங்கை தொடர்ந்தும் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படும். எவ்வாறிருப்பினும் மக்கள் தற்போது இது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39