7 அறிவுடையவர் அவரது உதவியாளர்களை வைத்து 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை தடுத்துள்ளார் - விமல்

Published By: Digital Desk 5

07 Oct, 2022 | 01:02 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூல விவாதம் பிற்போடப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானமாகும்.

ஏழு அறிவுடையவர் என வர்ணிக்கப்பட்டவர் அமெரிக்காவிலிருந்து கொண்டு அவரது உதவியாளர்கள் மூலம் 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை தடுத்துள்ளமை கவலைக்குரியது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்ற அமர்வு கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபை இரு நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவிலும் , கட்சி தலைவர் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய வியாழக்கிழமை (06)   திருத்தச் சட்டமூல வரைபு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

22ஆவது திருத்தச்சட்ட மூல வரைபில் இரட்டை குடியுரிமை உள்ளவர் அரசியலில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளதால் ஆளும் தரப்பின் ஒருசிலர் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

ஏழு அறிவினை உடையவர் என வர்ணிக்கப்பட்டவர் தற்போது அமெரிக்காவில் இருந்துக் கொண்டு தனது உதவியாளர்களுடன் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விவாததத்துக்கு எடுத்துக் கொள்வதை தடுத்துள்ளமை கவலைக்குரியது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை அரசாங்கம் ஒருவார காலத்துக்கு பிற்போட்டுள்ளது.

இத்தீர்மானத்தை அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்துள்ளது.7 அறிவுடையவரின் தேவைக்காக பாராளுமன்றத்தை கூட்டி நாட்டு மக்களின் நிதியை வீண்விரயமாக்க வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10