வீடொன்றிலிருந்து 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது 

By Nanthini

07 Oct, 2022 | 12:15 PM
image

பிலியந்தலை - சித்தமுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 6 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அம்பலாந்தோட்டை பாலத்துக்கு அருகில் 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 19 வயது நபரொருவரை நேற்று வியாழக்கிழமை (ஒக் 6) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பெற்ற தகவலின்படி, கெஸ்பேவ, சித்தமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

சுற்றிவளைப்பின் போது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், வீட்டுக்குள் நுழைந்து தேடலில் ஈடுபட்ட பொலிஸார், அங்கிருந்து 6 கிலோ 176 கிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் 9 மில்லிமீற்றர் ரக 19 துப்பாக்கித் தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

அத்துடன் ஹெரோயினை பொதியிடுவதற்கும் சீல் வைப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள், இரண்டு போலியான வாகன இலக்கத் தகடுகள், வாகனத்தின் சாவிகள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள கெஸ்பேவ பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் 40 கிராம் ஹெரோயினுடன் கைதான சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை (ஒக் 7) அம்பலாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38