சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

Published By: Digital Desk 3

07 Oct, 2022 | 12:12 PM
image

(இராஜதுரை ஹஷான்இஎம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள 3 ஆவது மசகு எண்ணெய் கப்பலுக்கு டொலர் செலுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மசகு எண்ணெய் கப்பலுக்கு டொலர் செலுத்தியதால் கடந்த  இரண்டு மாதகாலமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

3ஆவது மசகு எண்ணெய் கப்பல் நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு டொலர் செலுத்துவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால் துரதிஸ்டவசமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தை இன்று முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தை மூடுவதால் நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. ஆகவே எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

மூன்றாவது மசகு எண்ணெய் கப்பலுக்கு டொலர் செலுத்தியவுடன் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும். எரிபொருள் கப்பல்களுக்கு உரிய கட்டணத்தை செலுத்த இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57