கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப தம்பதி

By Vishnu

07 Oct, 2022 | 10:30 AM
image

பிரிட்­டனைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தென் ஆபி­ரிக்­காவில் கடத்­தப்­பட்டு, கொலை செய்­யப்­பட்­ட­துடன் அவர்­களின் உடல்கள் முத­லை­க­ளுக்கு உண்ணக் கொடுக்­கப்­பட்­ட­தாக தென் ஆபி­ரிக்க நீதி­மன்­ற­மொன்றில் கடந்த செவ்­வாய்­கி­ழமை தெரி­விக்­கப்­பட்­டது.

74 வய­தான, தோட்­டக்­கலை நிபுணர் ரொட் சாண்டர்ஸ், அவரின் மனை­வி­யான கலா­நிதி ரசெல் சாண்டர்ஸ்  எனும் நுண்­ணு­யி­ரி­ய­லாளர் ஆகி­யோரே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர். 

2018 பெப்­ர­வ­ரியில் தென் ஆபி­ரிக்­கா­வி­லுள்ள சர­ணா­லயம் ஒன்றில் அரிய வகை­யான தாவர விதை­களை அவர்கள் தேடிக் கொண்­டி­ருந்­த­போது இவர்கள் காணாமல் போயினர்.

டர்பன் நக­ரி­லி­ருந்து 30 மைல் தூரத்­தி­லுள்ள மேற்­படி சர­ணா­ல­யத்தில் தாம் முகா­மிடப் போவ­தாக ஊழியர் ஒரு­வ­ரிடம் இவர்கள் தெரி­வித்­தனர். அதன் பின்னர் இவர்கள் திரும்­பி­வ­ர­வில்லை. 

இவர்கள் காணாமல் போயுள்­ளனர் என 2018 பெப்­ர­வரி 10 ஆம் திகதி அறி­விக்­கப்­பட்­டது. 

இது தொடர்­பான வழக்கு தென் ஆபி­ரிக்­காவின்  டர்பன் நக­ரி­லுள்ள டர்பன் மேல் நீதி­மன்­றத்தில் தற்­போது நடை­பெ­று­கி­றது. 

இவ்­வ­ழக்கில் பொலிஸார் வாக்­கு­மூலம் அளிக்­கையில், இத்­தம்­ப­தி­யினர் காணாமல் போன­தாக அறி­விக்­கப்­பட்ட தினத்தில், ஒரு பெண் உட்­பட மூவரால் கடத்­தப்­பட்­ட­தா­கவும் அவர்­களின் உட­மைகள் அப­க­ரிக்­கப்­பட்ட பின்னர் அவர்கள் கொல்­லப்­பட்­டனர் எனவும் தெரித்­துள்­ளனர்.

சந்­தேக நபர்­களால் ஒரு தம்­ப­தி­யினர் 2018 பெப்­ர­வரி 15 ஆம் திகதி கைது செய்­யப்­பட்னர் எனவும் மற்­றொ­ருவர் சில வாரங்­களின் பின்னர் கைதானார் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

பிரித்­தா­னிய தம்­ப­தியின் டச­லங்­களை  உடல்­களை பை ஒன்றில் கட்டி, ஆற்றில் வீசி­ய­தாக சந்­தேக நபர் ஒருவர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­தி­ருந்தார்.

இச்சடலங்களின் சிதைவுகள் சில நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர்கள் பல மாதங் களாக அடையாளம் காணப்படாமல் இருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி: யுக்ரைனிய...

2022-12-02 10:27:47
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17