மதவாச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர்.

வீதி ஒழுங்கை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரிடம் மதுபான போத்தல் ஒன்றை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.