தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்

Published By: Vishnu

07 Oct, 2022 | 10:45 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணை பிரேரணைக்கு அமைய நியமிக்கப்பட்ட தேசிய சபையின் இரண்டாவது கூட்டம்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் 06 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றது.

அதன் பிரகாரம்  குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால தேசிய கொள்கை மறுசீரமைப்புக்கான உப குழுவின் உறுப்பினர்களாக பவித்திரா வன்னியாராச்சி, சாகர காரியவசம், வஜிர அபேவர்தன, அசங்க நவரட்ண, மனோ கணேசன், ரோஹித அபேகுணவர்தன, அலி சப்ரி ரகீம், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், நசீர் அஹமட், நாமல் ராஜபகஷ, ஜோன்ஸடன் பெர்னாண்டோ, அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான உப குழுவின் உறுப்பினர்களாக சிவநேசதுரை சந்திரகாந்தன், வஜிர அபேவர்தன, அசங்க நவரட்ண, ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், சம்பிக்க ரணவக்க, சிசிர ஜயக்கொடி, எம்.ராமேஷ்வரன், மனோ கணேசன், டிரான் அலஸ், நசீர் அகமட், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணை பிரேரணைக்கு அமைய நியமிக்கப்பட்ட தேசிய சபையின் இரண்டாவது கூட்டம்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேறறு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.  இதன்போது தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றது.

அத்துடன் இந்த உப குழுக்கள் இரண்டும் இன்று கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற...

2023-03-31 17:33:17
news-image

கடும் வெப்பமான காலநிலை : அதிகம்...

2023-03-31 16:50:00
news-image

மிரிஹானவுக்கு அழைக்கப்படும் 3,000 பாதுகாப்பு தரப்பினர்!

2023-03-31 16:52:44
news-image

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க...

2023-03-31 16:42:54
news-image

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை...

2023-03-31 16:29:30
news-image

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு...

2023-03-31 16:15:25
news-image

மாணவர் பஸ் சேவை,முச்சக்கர வண்டி கட்டணம்...

2023-03-31 16:09:31
news-image

டயானா கமகேவின் மனு தொடர்பில் நீதிமன்றின்...

2023-03-31 16:56:00
news-image

நீர்கொழும்பு, கட்டானை பகுதியில் ஆடை தொழிற்சாலையின்...

2023-03-31 16:33:45
news-image

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப...

2023-03-31 14:45:33
news-image

வைத்தியர்கள் இன்மையால் அநுராதபுரம், முல்லைத்தீவு வைத்தியசாலைகளின்...

2023-03-31 14:06:26
news-image

கொலன்னாவையில் ஜீப்பை சுற்றிவளைத்த மக்கள் :...

2023-03-31 13:58:21