சட்டவிரோதமாக 183 சிகரெட் அட்டைப்பெட்டிகளை நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

டுபாயில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்த இலங்கை பிரஜையொருவரே (44) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 18 இலட்சம் என சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளை சுங்கப்பிரிவினர் கையகப்படுத்தியதுடன், குறித்த சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.