உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தவேண்டும்- சர்வதேச மன்னிப்புச்சபை

By Rajeeban

07 Oct, 2022 | 08:10 AM
image

 ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அவதானத்தை செலுத்தவேண்டியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்;ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் தினுசிகா திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுசரியான பாதையிலான வரவேற்கத்தக்க நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளால்  இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் உட்;பட பரந்துபட்ட மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான நிபுணர் பொறிமுறையை முன்வைக்குமாறு சிவில் சமூகத்தினர் விடுத்த வேண்டுகோளிற்கு மனித உரிமை பேரவை பதிலளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கான  தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்,இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகம் மற்றும் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை போன்ற மனித உரிமை மீறல்களிற்கான நிவர்த்தி  அமைப்புகளின் நடவடிக்கைகள் வலுவான விதத்தில் காணப்படுவதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்புநாடுகளும் சர்வதேச பொறுப்புக்கூறலை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் தினுசிகா திசநாயக்க சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழும் விசாரணைகளை வழக்குகளை முன்னெடுக்கவேண்டும்,சாத்தியமான பட்சத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:05:31
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04
news-image

நாட்டின் பல மாகாணங்களில் 75 மி.மீ....

2022-12-02 08:50:24