பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது முற்றிலும் தவறானது - விமல் வீரவன்ச

Published By: Vishnu

06 Oct, 2022 | 09:38 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்,எம்.வசீம்)

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது முற்றிலும் தவறானது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரின் நிதியா பாராளுமன்றில் செலவு செய்யப்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (6) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் இன்று (06)அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டது,நாங்களும் விவாதத்துக்கு தயாராக வந்தோம்.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து அந்த உரை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பினர் தீர்மானித்தனர்.பாராளுமன்ற அமர்வுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 90 இலட்சம் ரூபா செலாவாகுகிறது.

22ஆவது திருத்தச் சட்டமூலம் வரைபு மீதான விவாதத்தை நடத்தாவிடின் பாராளுமன்றத்தை ஒத்திவையுங்கள் அதனை விடுத்து ஜனாதிபதியின் உரை மீதான பொய்யான விவாதத்தை நடத்துவது பயனற்றதாகும்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் பசி கொடுமையால் மயங்கி விழும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள போது பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீண்விரயமாக்குவது முற்றிலும் தவறானது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரின் நிதியா பாராளுமன்றில் செலவு செய்யப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54