ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By Nanthini

06 Oct, 2022 | 04:38 PM
image

டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

'ஒரு நாள் கூத்து', 'மாஸ்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஃபர்ஹானா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ''இப்படத்தின் நாயகி குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண். அவரின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைக்கதை சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண் தோற்றத்தில் நடித்திருப்பதாலும், அவர் ஹிஜாப் அணிந்திருப்பதாலும் பட வெளியீட்டுக்கு முன்னரே பெரும் சர்ச்சையும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53
news-image

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'Hi 5'...

2022-12-07 11:04:39
news-image

திரைக்கு வரும் ‘அனல்’

2022-12-06 18:19:32
news-image

நடிகர் கன்னா ரவி நடித்திருக்கும் 'ரத்த...

2022-12-06 11:56:16
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டிய 'காலேஜ்...

2022-12-06 11:55:41