நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றக் கூடாது - எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Published By: Digital Desk 3

06 Oct, 2022 | 06:35 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் தீர்மானத்துக்கமைய அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூல வரைபு மீதான விவாதம் இன்று இடம்பெறவில்லை. 

திருத்தச்சட்ட வரைபுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கவில்லை என பிரதமர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தார்.

22ஆம் திருத்த வரைபு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முன்னர் முதலில் ஆளும் கட்சியின் கருத்தை ஒருமுகப்படுத்துங்கள். 22 ஆவது திருத்தம் பிறிதொரு 20 ஆவது திருத்தமாக கூடாது, நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றவும் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் சபையில் தெரிவித்தர்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (6) ஜனாதிபதியின் சிறப்பு விவாதத்தை தொடர்ந்து அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பினருக்கிடையில் காரசாரமான முறையில் வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றன.

ஒரு தரப்பினரது நோக்கத்துக்காக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு சமர்பிக்கப்படவில்லை,நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒருதரப்பினர் தற்போது புதிய யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதாவது கண்களை திறந்து,அறிவை பயன்படுத்தி செயற்பட வேண்டும்.

இல்லாவிடின் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அவதானம் செலுத்தப்பட்டது.

எதிர்க்கட்சியுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அரசியலமைப்பு 22ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் ஈடுப்பட தடை விதித்தல், ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்தல் மற்றும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் நாங்கள் முன்வைத்த யோசனைக்கு பிரதமர் சாதகமான தீர்மானத்தை தெரிவிக்கவில்லை.

ஆகவே 22 ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கவில்லை என்று குறிப்பிடவில்லை. ஆளும் தரப்பினரிடம் இணக்கப்பாடு உள்ளதா என்பதை முதலில் உங்களின் மனசாட்சியிடம் கேட்டுபாருங்கள். 22ஆவது திருத்தம் பிறிதொரு 20ஆவது திருத்தமாக காணப்பட கூடாது என பிரதமரை நோக்கி குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷமன் கிரியெல்ல அரசியல் கட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு அரசியலமைப்பை திருத்தம் செய்ய முடியாது.ஆகவே பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபித்து அரசியலமைப்பை திருத்தம் செய்யுங்கள் என சபாநாயகரிடம் குறிப்பிட்டார்.

இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்க கட்சி தலைவர் கூட்டத்தை நடத்த தயார் என சபைக்கு அறிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்கும்,ஆளும் கட்சியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. கட்சி தலைவர் கூட்டத்துக்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பங்குப்பற்றுவாரா என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரம வீரகொடி தெரிவித்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கட்சி தலைவர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டு வந்தால் ஆதரவு வழங்குவோம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன உறுப்பினர் உதய கம்மன்பில ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட சட்டமூல வரைபிற்கும்,தற்போதைய வரைபுக்கும் இடையில்  வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ள தரப்பினரை நாட்டுக்கு பகிரங்கப்படுத்துங்கள் என்றார்.

எழுந்து உரையாற்றிய சுயாதீன உறுப்பினர் வீரசுமன வீரசிங்க அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிர்தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என்று குறிப்பிட வேண்டாம்,ஒருசிலரது தனிப்பட்ட தேவைக்காக ஆளும் தரப்பினரே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு தடையாக உள்ளார்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி இரட்டை குடியுரிமை உள்ள நபரின் நலனுக்கான நாட்டு மக்களின் எதிர்காலத்தை இல்லாதொழிக்க வேண்டாம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தான் வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47