பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் 'லவ் டுடே' படத்தின் முன்னோட்டம் 

By Nanthini

06 Oct, 2022 | 06:34 PM
image

'கோமாளி' பட இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'லவ் டுடே' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர்கள் கதையின் நாயகராக நடிப்பது இயல்பாகிவிட்ட இந்த காலகட்டத்தில், 'கோமாளி' எனும் படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அவரது இயக்கத்தில் தயாராகும் 'லவ் டுடே' எனும் புதிய படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக 'நாச்சியார்' படப் புகழ் நடிகை இவானா நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

2கே கிட்ஸ் காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது‌. 

இன்றைய நவீன யுக இளைஞர்களின் காதலுக்கு செல்ஃபோன் மூலமாக எப்படி சோதனை வருகிறது என்பதை சுவாரஸ்யமாகவும், உறவுச்சிக்கல் குறித்த விடயத்தை உணர்வுபூர்வமாகவும் விவரித்திருக்கிறது. இதனால் 'லவ் டுடே' எனும் இந்த திரைப்படம் குறித்து இளைய தலைமுறை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த படம் நவம்பர் மாதம் 4ஆம் திகதி பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’...

2022-12-09 11:40:19
news-image

நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

2022-12-09 11:39:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-12-09 11:36:08
news-image

ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் ஜோடியாக...

2022-12-09 11:21:41
news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53