தமிழில் கதையின் நாயகியாக அறிமுகமாகும் நடிகை ரூபா, முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எமகாதகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இதனை முன்னணி நட்சத்திர நடிகையான ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பெப்பின் ஜோர்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம், 'எமகாதகி'. இதில் தெலுங்கு நடிகை ரூபா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜெஸின் ஜோர்ஜ் இசையமைத்திருக்கிறார். சுப்பர் நெச்சுரல் மிஸ்டரி, த்ரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சாரங் ப்ரதர்ஸ் மற்றும் நய்சாத் மீடியா வொர்க்ஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் சோளக்காட்டு பொம்மையொன்றும், அதன் மீது கோழியொன்றும் இடம்பெற்றிருக்க, பின்னணியில் காவல்துறை வாகனமொன்று இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM