நட்டி நடிக்கும் 'குருமூர்த்தி' திரைப்பட டீஸர் வெளியீடு

By Nanthini

06 Oct, 2022 | 01:35 PM
image

ட்டி என்கிற நட்ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குருமூர்த்தி' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கே.பி. தனசேகர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'குருமூர்த்தி'. இதில் நட்டி என்கிற நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூனம் பஜ்வா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ரவி மரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராம்கி, சாய் தீனா, அஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சத்ய தேவ், உதய்ஷங்கர் ஆகிய இருவர் இசையமைத்திருக்கிறார்கள்.

அக்ஷன், த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரண்ட்ஸ் டாக்கீஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

டீசரில் நட்டி என்கிற நட்ராஜ், குருமூர்த்தி என்கிற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமூக விரோத செயல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல்துறையின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு குருமூர்த்தி, சட்டத்தில்‌ எப்படி சிக்க வைக்கிறார் என்பதை டீசர் உணர்த்துவதால், ரசிகர்களிடம் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும், படத்தின் தலைப்புடன் 'சர்ச்சைக்கு அப்பாற்பட்டவன்' என்ற வாசகம் இணைக்கப்பட்டிருப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்