காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ; இந்திய இருமல் மருந்துகள் குறித்து விசாரணை

By T. Saranya

06 Oct, 2022 | 03:36 PM
image

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இச் சம்பவத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. 

காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த 4 மருந்துகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"நச்சுத்தன்மை கொண்ட இந்த இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த மருந்துடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது'

இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி: யுக்ரைனிய...

2022-12-02 10:27:47
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17