சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை பாராளுமன்றுக்கு சமர்பிக்க முடியாது - ஜனாதிபதி

By Vishnu

06 Oct, 2022 | 01:31 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்,ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாடு நிபந்தனைகளை பாராளுமன்றுக்கு தற்போது சமர்பிக்க முடியாது. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பிறகு நிபந்தனைகளை தெளிவுப்படுத்த அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (06) வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி – சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டு நிபந்தனைகளில் ஊழல் ஒழிப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் சர்வதேச ஒத்துழைப்புக்கு தடையாக உள்ளது, ஆகவே அரசாங்கத்திற்குள் உள்ள ஊழலை ஒழிக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்- ஊழல் ஒழிப்பு தொடர்பில் நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு தொடர்பில் புதிய சட்டத்தை இயற்ற அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றம் அது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

கேள்வி- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் பெற்றுகொள்ளும் சகல தீர்மானங்களும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்டார், ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு நிபந்தனைகள் இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. எப்போது அவை சமர்ப்பிக்கப்படும் ?

 பதில்- கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பிரதான கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே தற்போதைய நிலையில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு நிபந்தனைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாது. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பிறகு நிபந்தனைகள் தொடர்பில்  தெளிவுப்படுத்த அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள்...

2022-12-09 15:05:51
news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 15:35:18
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50