பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக் கட்சியை தொடங்கிய சந்திரசேகர ராவ்

By Vishnu

06 Oct, 2022 | 01:27 PM
image

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், தேசிய அளவில் கட்சியை விரிவுபடுத்தும் வகையில், 'பாரத் ராஷ்டிரிய சமிதி' என கட்சிக்கு பெயர் மாற்றம் செய்திருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் 05 ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டார்.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டிருக்கும் தெலுங்கானா மாநிலத்தை சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி செய்து வருகிறது. இந்தக் கட்சி மாநில அரசியலிலிருந்து தற்போது தனது பார்வையை தேசிய அரசியலின் பக்கம் திருப்பி இருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் கட்சியின் பெயரை புதிதாக அறிவித்திருக்கிறது.

இதற்காக ஹைதராபாத்தில் கட்சி தலைமையகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான ஹெச் டி குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

இவர்களின் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பெயர் மாற்றத்திற்கான அறிவிப்பு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது . இதனை தொடர்ந்து கட்சியின் பெயர் 'பாரத் ராஷ்டிரிய சமிதி' என மாற்றப்பட்டது . இதனை மாநில முதல்வரும், கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் முன்மொழிந்தார். பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான உடன் கட்சியினரும், தொண்டர்களும் வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்து, இடிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும் பாரத் ராஷ்டிரிய சவிதையின் தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து‌ மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான ஹெச் டி குமாரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

'' அடுத்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்களுடைய கட்சி, பி ஆர் எஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும்'' என தெரிவித்தார்.

சந்திரசேகரராவின் முயற்சியை பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி: யுக்ரைனிய...

2022-12-02 10:27:47
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17