bestweb

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி - இருவர் காயம்

Published By: Vishnu

06 Oct, 2022 | 12:50 PM
image

(க.கிஷாந்தன்)

கொட்டகலை – திம்புல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் 05 ஆம் திகதி புதன்கிழமை இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட  விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போவில் நடத்துனராக கடமையாற்றும் பி.ஜகத் ஜெயானந்த பண்டார (வயது 48) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

அட்டனில் இருந்து மெதகம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பின்நோக்கிச் சென்ற நிலையில், வீதியின் குறுக்கே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குறித்த நடத்துனர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்த போது, லொறியில் பின்நோக்கி சென்று குடைசாய்யும் வேளையில் இவரின் மீது அதிலிருந்த கூரைகள் உடல் மீது விழுந்ததில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-11 06:21:00
news-image

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள்...

2025-07-11 07:01:56
news-image

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு,...

2025-07-11 05:43:42
news-image

வரி குறைக்கப்பட்டமைக்கான நிபந்தனைகளை வெளியிடுங்கள் ஐ.தே.க.பொதுச்...

2025-07-11 05:41:05
news-image

இந்திய ஒப்பந்தம்: பொதுச் சுகாதாரத்தை பாதிக்கும்...

2025-07-11 05:38:39
news-image

அமெரிக்காவின் தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு...

2025-07-11 05:35:23
news-image

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு நாள்...

2025-07-11 05:32:38
news-image

ஜனாதிபதி, பிரதமர் பனிப்போரால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்;...

2025-07-11 05:17:30
news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07