ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

By Rajeeban

06 Oct, 2022 | 11:09 AM
image

ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையை திருத்தங்களுடன் நிறைவேற்றுவதற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈழத்தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இந்தியாவும் ஏனைய உறுப்புநாடுகளும் ஆதரவளிக்கவேண்டும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச அனுசரணையுடனான சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்;ற விடயங்களை மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் இணைத்து அந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிராந்திய நாடு என்ற அடிப்படையில் வளர்ந்துவரும் வல்லரசு என்ற அடிப்படையில் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டிய தார்மீக கடப்பாடு இந்தியாவிற்குள்ளது- அவ்வாறான நீதிமூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படமுடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 13:24:01
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50
news-image

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில்...

2022-12-09 11:55:41
news-image

மன்னாரில் பல கிராமங்களைத் தாக்கிய சூறாவளி

2022-12-09 11:51:18