இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரம் - இந்தியா சீனாவை தொடர்புகொண்டுள்ளது பாரிஸ்கிளப்

Published By: Rajeeban

06 Oct, 2022 | 10:52 AM
image

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள தொடர்பில் பாரிஸ் கிளப்பின் கடன் வழங்குநர்கள் இந்தியா சீனாவை தொடர்புகொண்டுள்ளனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் பாரிஸ் கிளப்பின் கடன்வழங்குநர்கள் இந்தியா சீனாவை தொடர்புகொண்டுள்ளனர் என இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வளர்ந்துவரும் நாடுகளின் கடப்பாடுகள் தொடர்பில்மீள்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக கடன்வழங்கியவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியையே பாரிஸ் கிளப் மேற்கொண்டுள்ளது.

மேற்குலகின் இரு தரப்பு கடன்வழங்குநர்களை - செல்வந்த நாடுகளை உள்ளடக்கிய பாரிஸ் கிளப் இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுத்து ஆகஸ்ட் மாதத்தில் சீனா இந்தியா நாடுகளிற்கு கடிதம் அனுப்பியுள்ளது இன்னமும் அதற்கு பதில் இல்லை என தனது பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் தனது பெயரை வெளியிடுவதை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்;கை தொடர்பாக ஒருங்கிணைப்பது உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்கள் குழுவை ஏற்படுத்துவதற்கு உதவலாம் அல்லது கடன்மறுசீரமைப்பு தொடர்பில் வழமையான சந்திப்புகளை நடத்த உதவலாம் என  அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு இந்த முயற்சிகள் குறித்து தெரியாது.

இலங்கையை தளமாக கொண்ட ஆசிய இராஜதந்திரியொருவர் பாரிஸ்கிளப் தனது அமைப்பில் அங்கத்துவம் வகிக்காத கடன் வழங்குநர்களுடன் தொடர்புகொண்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.

சீன இந்திய அதிகாரிகளிடம் கருத்துக்களை பெற முடியவில்லை.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26