சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் பாதுகாப்பு : சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக போராடிவரும் முல்லைத்தீவு மீனவர்கள் விசனம்

By Vishnu

05 Oct, 2022 | 09:37 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில்  சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டத்துக்கு புறம்பான வகையில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நபர்களை இராணுவ முகாம் ஒன்றின் இராணுவ அதிகாரி உட்பட 25 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தமது பாதுகாப்பை வழங்கி இன்றையதினம் (05) முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்கு அழைத்து வந்தமையானது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட  விரோத கடற்தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவம் ,நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் ஆதரவளித்து வருகின்றார்கள் என்பது அப்பட்டமாக வெளிப்படுவதாக சட்டவிரோத மீன்பிடிக்கு  எதிராக இன்றையதினம் (05)மூன்றாவது நாளாக போராடிவரும் முல்லைத்தீவு மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடிக்கு  எதிராக முல்லைத்தீவு மீனவர்கள்  இன்றையதினம் (05)மூன்றாவது நாளாக முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்துக்கு முன்பாக போராடிவரும் நிலையில் இன்றுகாலை சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இன்னொரு மீன்பிடி தொழிலாளர்கள் இவர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதோடு தொடர் போராட்டம் இடம்பெறும் இடம் நோக்கி வரவும் முயற்சி செய்த நிலையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்திருந்தனர். 

இந்த நிலையில் இவ்வாறு வன்முறையை ஏற்படுத்தும் வகையில் வருகைதந்த சுருக்குவலை தொழிலான சட்டவிரோத கடற்தொழிலுக்கு ஆதரவான பிரதான நபர்களை முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ முகாமின் அதிகாரி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் முல்லைத்தீவு நீரியல்வள திணைக்களம் முன்பாக அழைத்துவந்து நீரியல் வள திணைக்களத்துக்குள் சென்று மகஜர் ஒன்றை வழங்கிவிட்டு திரும்பி வரும் வரை திணைக்கள வாசலில் காத்திருந்து பின்னர் சென்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38