இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது- அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஏபிடி வில்லியர்ஸ்..

Published By: Rajeeban

05 Oct, 2022 | 05:23 PM
image

சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓராண்டுக்கு முன்பு அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடருக்கு மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு இணையப்போவதாகத் தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ். ஆனால், அவர் வீரராக இணையப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்துக்குத் திரும்பும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்குத் தன்னுடைய ஆதரவைத் தரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

சமூகதள உரையாடல் ஒன்றின் போது அவர் கூறியதாவது:- அடுத்த ஆண்டு நான் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு செல்லப் போகிறேன். ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்காக அல்ல. ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன். 

கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும். என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது. ஏனெனில் என்னுடைய வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறேன்.

தான் அடுத்து தொடங்கப்போகும் யூடியூப் சேனல் பற்றி அறிவித்த டி வில்லியர்ஸ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் உள்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

இந்த உரையாடலின்போது இப்போதைக்குத் தான் பயிற்சியாளர் ஆகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய மகத்தான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த டி வில்லியர்ஸ் தற்போதைக்கு தன் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதே தன்னுடைய பிரதானம் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும்

அவர் கூறும் போது நான் நிச்சயமாக ஒரு அணியைப் பயிற்சி செய்யும் திட்டத்தில் இல்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுமே பகிர்ந்துகொள்ள நான் நிச்சயம் விரும்புகிறேன். ஆனால் அதற்கான நேரம் வரும்.

ஆனால் இப்போதைக்கு நான் எந்த அணியோடும் இணையத் தயாராக இல்லை. பயிற்சியாளரானால் மீண்டும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் மீண்டும் பயணம் மேற்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பல பயணங்கள் மேற்கொண்டுவிட்ட நான் இப்போதைக்கு சில காலம் என் குடும்பத்தோடு என் நேரத்தை செலவளிக்க நினைக்கிறேன் என கூறி உள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20