மெலிந்தவராக தோற்றமளிக்க...

Published By: Nanthini

05 Oct, 2022 | 04:03 PM
image

1. நீண்ட, நேரான ‘ஸ்கர்ட்’ கறுப்பு அல்லது கருநீலம் போன்ற நிறங்களில் அணியுங்கள். இதனால் நீங்கள் உயரமாக தெரிவது மட்டுமல்லாமல், எடை குறைந்தவராகவும் தோன்றுவீர்கள்.

2. இறுக்கமான டொப்ஸ் அல்லது டீ ஷர்ட் அணிவதை தவிர்க்கவும்.

3. `லூஸ்' ஓவர்கோட் அணிந்தால், உங்களின் உண்மையான எடையை அது மறைக்கும். ஆனால், நீங்கள் அணியும் ஓவர்கோட் முழங்காலுக்கு மேல் சுமார் 6 அங்குலம் உயரமானதாக இருக்க வேண்டும். இதை விட உயரமாகவோ நீண்டதாகவோ அணிந்தால், உங்கள் எடையை அது கூட்டிக்காட்டக்கூடும்.

4. கழுத்துக்கு இறுக்கமான (Close Neck) உடைகளை அணியாதீர்கள்.

5. உடலோடு ஒட்டியிருக்கும் உடைகளை தவிருங்கள்.

6. பெரிய டிசைன்கள் உள்ள உடைகளையும், படுக்கை கோடுகள் உள்ள உடைகளையும் அணிந்தால், அது உங்களை குள்ளமாகவும் பெருத்தும் காட்டும்.

7. சிறிய டிசைன்கள், நீண்ட நெடுக்குக் கோடுகள் கொண்ட உடைகள் அணிந்தால், உயரமாகவும் மெலிந்தும் தோன்றலாம். நீண்ட பட்டன் வரிசைகள் உள்ள உடைகள் மெல்லிய தோற்றத்தை அளிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்