கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு : முக்கிய சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் கைது

Published By: Vishnu

05 Oct, 2022 | 04:15 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு- கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களனி பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர்  கொழும்பு- சேதுவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கி, இலக்க தகடுகள் மாற்றப்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் 4 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும்  சந்தேக நபர்களில் ஒருவர் கடலோர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியின் ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் ; கட்சி...

2026-01-25 17:33:06
news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57