5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுத்தை

Published By: Digital Desk 5

05 Oct, 2022 | 04:36 PM
image

(க.கிஷாந்தன்)

கொட்டகலை, திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி, சுமார் 5 மணிநேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவொன்றும், நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்தே, சிறுத்தைப்புலிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

குறித்த கூட்டு நடவடிக்கை வெற்றிகரமாக முடியும் வரை பிரதேசத்துக்கு தேவையான பாதுகாப்பை திம்புளை - பத்தனை பொலிஸார் வழங்கினர்.

சுமார் 4 அடி நீளமான, ஒரு வயதான இந்த ஆண் சிறுத்தைப்புலி, நாயொன்றை வேட்டையாட வந்தவேளை, வீட்டின் பின்பகுதியில் உள்ள அறைக்குள் விழுந்து அதற்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டுள்ள சிறுத்தை, ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதன் உடல் நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அது பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55