இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து கொழும்பில் சிங்கர் Lifestyle Festival கண்காட்சியில் வைபவரீதியாக புத்தம்புதிய Huawei GR5 2017 உற்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளன.

Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷுண்லி வாங், இலங்கையில் Huawei சாதனங்களுக்கான பொது முகாமையாளரான கல்ப பெரேரா, சிங்கர் பீஎல்சி குழுமுத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்துல் பிரிவின் பணிப்பாளரான குமார் சமரசிங்க மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தில் Huawei இன் வர்த்தகநாம முகாமையாளரான சஹான் பெரேரா ஆகியோர் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 

தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே GR5 2017 முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

G உற்பத்தி வரிசையில் புத்தம்புதிதாக இணைந்துள்ள இப்புதிய ஸ்மார்ட்போன், தொழில்நுட்ப அம்சங்களில் எவ்விதமான குறைவுகளுமின்றி, நவநாகரிக வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இரட்டை கமரா மற்றும் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளை உபயோகிக்கும் விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பம் அடங்கலாக பல்வேறு தெரிவுகளுடனான அனுகூலங்களுடன், ஈடுஇணையற்ற விலைகளில் வாடிக்கையாளர்கள் தற்போது ஸ்மார்ட்போன் ஒன்றைக் கொள்வனவு செய்யமுடியும்.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் கருத்து வெளியிடுகையில்,

“Huawei இன் தேசிய விநியோகத்தர் என்ற வகையில் சிங்கர் ஸ்ரீலங்கா இதனை நாடெங்கிலும் அனைத்து மக்களும் பெற்றுப் பயனடைய வழிசெய்யும்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் Huawei புத்தம்புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த உற்பத்தி தொடர்பில் இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்து வெளியிடுகையில்,

“பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட, தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட சாதனமே இப்புதிய அறிமுகம். ஈடுஇணையற்ற விலைகளில் தரமான மற்றும் சௌகரியமான ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகப்படுத்திவருகின்ற Huawei இன் ஸ்தானத்தை இது மேலும் புலப்படுத்துகின்றது.

GR5 2017 இன் அறிமுகத்தை பிராந்தியத்திலேயே முதன்முதலாக அனுபவிக்கப்பெற்ற நாடாக இலங்கை மாறியுள்ளது என்பதை பெருமையுடன் அறிவிக்க விரும்புகின்றோம். உயர் தரம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், இரட்டை கமரா மற்றும் விரல் அடையாள சென்சார் தொழில்நுட்ப அம்சங்கள் போன்ற புத்தாக்கங்களுடன் பன்முகப்பட்ட மற்றும் உயர் தர சாதனத்தை அனுபவிக்க விரும்புகின்ற அனைவருக்கும் பயனளிக்கும்” என்று குறிப்பிட்டார்.

12 MPமற்றும் 2MP பின்புற கமரா அடங்கிய இரட்டை கமரா வழங்கும் துல்லியமான விம்பங்கள் 3G RAM, சிறப்பான தொழிற்படுதிறனுக்காக 3340mAh மின்கலம்  5.5-அங்குல FHD மற்றும் உலோக வடிவமைப்பு, வளைவான உடலமைப்பு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இரவில் எடுக்கின்ற புகைப்படங்களை அதிக தெளிவுடனும் துல்லியத்துடனும் வசப்படுத்தவற்கு பாவனையாளருக்கு உதவும் வகையில் 1.25um large pixel தெரிவும் உள்ளது.

இலகுவாக உபயோகிக்கவும் சௌகரியத்தை வழங்கவும் மூன்றாவது தலைமுறை விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பத்தையும் Huawei GR5 2017 கொண்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தமது சாதனங்களை கடவுச்சொல் தெரிவை இணைத்துக்கொள்ள பெருமளவான வாடிக்கையாளர்கள் விரும்புகின்ற நிலையில் விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போனை வைத்திருப்பவர்கள் தங்களது சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை பாதுகாப்பதற்கான மேலதிக நன்மையை வழங்குகின்றது.

இப்புதிய Huawei GR5 2017 ஆனது ரூபா 35,900 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதுடன் பொன், வெள்ளி மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றன. இலங்கையில் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா நாட்டிலுள்ள தனது மிகப் பாரிய சில்லறை வர்த்தக வலையமைப்பினூடாக இது அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தும்ரூபவ் சிங்கர் மெகாரூபவ் சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள், 400 இற்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை உள்ளடக்கிய வலையமைப்பு மற்றும் நாடெங்கிலும் 1500 முகவர் விற்பனை மையங்களுக்கு சேவைகளை வழங்கிவருகின்ற சிங்கரின் டிஜிட்டல் ஊடகம் ஆகியன இதில் அடங்கியுள்ளன.